தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

இந்த வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் மாதம் நான்காம் திகதி நடைபெறும். இதேவேளை, கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சை டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைகள் பிற்போடப்படலாம் என தெரிவிக்கப்படும் தகவல் போலியானது என அவர் கூறினார். பரீட்சைகளை பிற்போடுவது மாணவ சமூகத்திற்கு ஆரோக்கியமான விடயம் அல்ல என்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன சுட்டிக்காட்யுள்ளார்.
