தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் பிரச்சினைகள் நிலவும் பட்சத்தில்இ அதிபர் ஊடாக முறையீடு செய்ய சந்தர்ப்பம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் ஏதாவது பிரச்சினைகள் நிலவும் பட்சத்தில் பாடசாலை அதிபர் ஊடாக முறையீடு செய்யலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வகையில் முறையீடுகளை சமர்ப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இது பற்றிய மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
