தரம் ஒன்று மாணவர்களுக்கு வாய்மொழி மூலமான ஆங்கில பாடநெறி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் அங்குரார்ப்பன நிகழ்வு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கொழும்பு கங்கொடவில சமுத்திராதேவி பெண்கள் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
சவால்களை எதிர்கொள்ளும் மாணவர் சமூகத்தை உருவாக்குவதற்கு தொடர்பாடல் மொழியாக ஆங்கில மொழி அவசியம் என்று அமைச்சர் இந்த நிகழ்வில் குறிப்பிட்டார். தரம் ஒன்று மாணவர்களுக்கு வாய்மொழி மூலமான ஆங்கில பாடநெறியை முன்னெடுப்பதற்கு 13 ஆயிரதது 800;; ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.