தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கை, வழமையான வரி விதிப்பை தாண்டிய நாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் ஒழுங்கு செய்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரி முறைமை மன்றத்தின் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு புதிய வரி முறைமை அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.