Home » தாமரை கோபுரத்திலிருந்து முதலாவது ஸ்கை டைவிங் நிகழ்வு!

தாமரை கோபுரத்திலிருந்து முதலாவது ஸ்கை டைவிங் நிகழ்வு!

Source
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் சுற்றுலாத்துறையை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையில், அதன் முதல் ஸ்கை டைவிங் நிகழ்வை நடத்தியது . ரெட்புல் ஸ்ரீலங்கா ஸ்கைடைவ் குழுவைச் சேர்ந்த இரண்டு ஸ்கைடைவ் வீரர்கள் தாமரை கோபுரத்தில் இருந்து பேஸ் ஜம்ப் நிகழ்வை நடத்தினர் . உலகப் புகழ்பெற்ற Red Bull SkyDiving சாம்பியன்களான Marco Waltenspiel மற்றும் Marco Fürst ஆகியோர் இந்த நிகழ்வைக் காட்சிப்படுத்த இலங்கைக்கு விஜயம் செய்தனர். தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரத்தில் இருந்து இரண்டு ஸ்கை டைவர்ஸ் குதித்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் . புகை மூட்டத்துடன் கோபுரத்தில் இருந்து அவர்கள் குதிப்பதை பதிவு செய்வதற்காக உடலில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. கோபுரத்தின் உச்சியில் இருந்து 250 மீற்றர் தொலைவில் டைவ் செய்து அந்த அணி அபார சாதனையை நிகழ்த்தியது.அவர்கள் பாராசூட் மூலம் மைதானத்தை அடைந்ததும், அவர்களை வரவேற்கும் வகையில் கலாச்சார நடனக் குழுவினர் நடனமாடினர். N.S
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image