Home » தாம் எப்பொழுதும் அரசியல் அமைப்பிற்கு அமையவே செயற்படுவதாக பதில் ஜனாதிபதி தெரிவிப்பு

தாம் எப்பொழுதும் அரசியல் அமைப்பிற்கு அமையவே செயற்படுவதாக பதில் ஜனாதிபதி தெரிவிப்பு

Source
Share Button

.

அடுத்த வாரம் பாராளுமன்றத்தைக் கூட்டி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய எதிர்பார்ப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதுவரை பதில் ஜனாதிபதியாக செயலாற்றும் உரிமையை தமக்கு வழங்கியிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறுகிய காலத்தில் பல அவசர தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொழுது சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடையை மேற்கொள்ளவோ அச்சுறுத்தலை மேற்கொள்வதற்கோ சில தரப்புக்கள் தயாராவதாக தகவல்கள் கிடைக்கப்பபெற்றுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமாக தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அதற்காக அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது அரசியல் அமைப்பச் சீர்திருத்தத்தை மீளக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் இந்தத் தினங்களில் மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களுக்காகவே தாம் இந்தப்பொறுப்பினை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டைக் கட்டியெழுப்பியதன் பின்னர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட முடியும். போராட்டக் காரர்களும் கிளர்ச்சியாளர்களும் என இரு குழுக்கள் நாட்டில் உள்ளன.

தாம் எப்பொழுதும் ஜனநாயகப் போராட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனினும், கிளர்ச்சியாளர்களுக்க எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற சேவைகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் நாட்டின் சட்ட ஒழுங்கு மிகவும் முக்கியமாகும். தாம் எப்பொழுதும் சட்டவிதிமுறைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் அரசியல் அமைப்பை மீறி ஒருபொழுதும் செயற்பட்டதில்லை எனவும் செயற்பபடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் அமைப்பைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்தைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட முப்படையினரின் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்படும். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கடந்த தினம் கலந்துரையாடப்பட்டது. அதற்காக விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வருமாறு அவர் சகல கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image