தாய்வானின் தலைவர் சாயி வென், அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். சீனாவின் கடுமையான விமர்சனத்திற்கு மத்தியில் இவரது விஜயம் இடம்பெற்றிருக்கிறது. மத்திய அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது, அவர் நியூயோர்க் சென்றிருப்பதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது, அவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவரையும் சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.