தாய்வானுக்கு ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்பந்தம்

தாய்வானுக்கு ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றின் பெறுமதி 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த கொடுக்கல் வாங்கல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலில் கப்பல்களை அழிக்கும் 60 ஏவுகணைகளும், 100 வான்வழி ஏவுகணைகளும் மற்றும் ஏனைய ஆயுதங்களும் உள்ளடங்குகின்றன. கடந்த மாதம் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றிருந்தார். இந்த விஜயத்திற்கு சீனா எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தாய்வான் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
