திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக உயர்ந்தபட்ச நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு ஆலோசனை

கொலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக உயர்ந்த பட்ச நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுவினர் முன்னெடுக்கும் கொலை மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் முழு சமுகத்தினருக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. ஆகையினால் குறித்த குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தராதரம் பார்க்காது சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்குமிடையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்ததையின் போதே அமைச்சர் இந்த விடயத்தை; தெரிவித்தார்.
