Home » திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி!

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி!

Source

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதில் இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை தேர்தலை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் (சுர்பானா ஜுரோங் திட்டம்) தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில் இன்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம்.அடுத்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

திருகோணமலை துறைமுகத்தை ஆழமான துறைமுகமாக மாற்ற வேண்டும். இதனை முன்னணி மூலோபாய துறைமுகமாகவும் மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா நமக்கு நெருக்கமாக இருப்பதால், அது மிகவும் முக்கியமானது.

தற்போது, ​​இந்தியாவுடன் பல திட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன. சம்பூர் ஆலையின் பணியை தொடர வேண்டும். இதற்கு தடையாக இருந்தால் நேரடியாக அரசின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image