Home Against Tamileelam திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

Source

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில் கூறுவதற்கேற்ப, திருகோணமலை எண்ணெய்க் குதங்களில் 61ல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51 சதவீதமும், இலங்கை ஐழுஊ நிறுவனத்திற்கு 49 வீதமும் உரிமை கிடைக்கும் வகையில் டிரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவெட் லிமிடட் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் மூலம் அபிவிருத்தித் திட்டமாக செயற்படுத்தவும் அனுமதி கிடைத்துள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் தற்போது இந்திய அரசாங்கத்துடன் செயற்படும் மூன்ற ஒப்பந்தங்களும் ராஜதந்திர பேச்சுக்களின் மூலம் பகுப்பாய்வு செய்து ஒன்றிணைந்த அபிவிருத்தி திட்டம் என்ற வகையில் செயற்படுவதற்கு இரு நாடுகளும் இணக்கத்திற்கு வந்துள்ளன.

இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது திட்ட நடவடிக்கைகளுக்காக 24 எண்ணெய்க் குதங்களை ஒதுக்குவதற்கும், இலங்கை ஐழுஊ நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தும் 14 எண்ணெய்க் குதங்களை நிறுவனத்தின் திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெரு நஷ்டம் ஏற்படுமென்பது எமது நாட்டின் மசகு எண்ணெய் சுய ஆதிக்கம் இல்லாமலாகுமெனவும் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image