தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகை தினமான நாளை மின் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை தீபாவளி தினத்திற்கு மறு தினமான எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் குறித்த தினத்திற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட வேண்டும். விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் அதுபற்றி வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை தீபாவளி தினமான நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.
