துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இடிபாடுகளிலிருந்து சடலங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்ட வருகின்றன. இடிபாடுகளுக்கிடையில் மேலும் பலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். உலக நாடுகள் குறித்த இரு நாடுகளுக்கும் மீட்புக் குழுவினரை அனுபப்பியுள்ளன. பூகம்பத்தில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் சுமார் 13 ஆயிரம் பேரும், சிரியாவில் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். இதேவேளை, ஆங்காங்கே சிறிய அளவிலான நிலஅதிர்வுகள் பதிவாகியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.