துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்கென 70 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் செயற்பாடுகளை 2024ஆம் அண்டில் ஆரம்பித்தாலும் முளையத்தின் சகல நிர்மானப்பணிகளும் 2025ஆம் ஆண்டில் பூர்த்தியாகவிருக்கின்றன. இந்த முனையத்தில், 16 லட்சம் கொள்களன்களை கையாளும் வாய்பு காணப்படுகிறது. ஒரே தடவையில் இண்டாயிரத்து 400 கொள்கலன்களை ஏற்;றிச் செல்லும் கப்பலை நிறுத்துவதற்கான வசதியும் மேற்கு முனையத்தில் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
