தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கான சாத்தியம்

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிறில் ரமபோஷா, பதவி நீக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிதி மோசடி குற்றச்சாட்டு அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், ஊழலுக்கு எதிரான சட்டத்தை மீறி செயற்பட்டதாகவும் தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. தாம் எந்தத் தவறையும் இழைக்கவில்லை என்றும், தனக்குச் சொந்தமான பண்ணையில் இருந்த மாடுகளை விற்பனை செய்ததன் மூலமே உரிய நிதியை திரட்டியதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
