தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதமாகும் சாத்தியம்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போஷா, தமக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒரு வாரத்தினால் தாமதமடைந்திருக்கிறது. ரம்போஷா, தோல்விக்கு அஞ்சியே நீதிமன்ற நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொது நிதியை மோசமாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
