இலங்கை உதைப்பாந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ அணியின் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெற்காசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் இம்முறை இலங்கையில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் 17 வயதிற்குட்பட்ட இலங்கை உதைப்பந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ அணியின் வளர்ந்து வரும் வீரர் விஜித் அனெக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தன்னாமுனை புனித ஜோசேப் வித்தியாலயத்தின் மாணவரான இவர் சிறுவயது முதலே பாடசாலை மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை பல போட்டிகளில் விளையாடி அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதுடன், தனது அணியின் வெற்றிக்கும் பெரும் பங்களிப்பினை வழங்கி வந்துள்ளார்.
இதன்படி தேசிய அணியில் இணைக்கப்படுள்ள விஜித் அனெக்சன் எதிர்வரும் 5 ஆம் திகதி ரெஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள பங்களாதேஸூக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
AR

