தேசிய ஆராய்ச்சி உபகரண தரவுக்கட்டமைப்பு இன்று வெளியிடப்பட இருக்கின்றது

தேசிய ஆராய்ச்சி உபகரண தரவுக்கட்டமைப்பு இன்று வெளியிடப்பட இருக்கின்றது. கல்வியமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் இதனை ஒழுங்கு செய்திருக்கின்றது. இலங்கையின் சகல கல்வி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களிடம் காணப்படும் ஆய்வு உபகரணங்கள் பற்றிய தகவல்கள் இந்தத் தரவுக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. அனாவசியமான முறையில் ஆராய்ச்சி உபகரணங்களை இறக்குமதி செய்வதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.
