Home » தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம்

Source

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை முதல் (21.07.2022) குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

பெற்றோல் விநியோகம்
*மோட்டார் சைக்கிள்- ரூபா 1500/=
*முச்சக்கர வண்டி -ரூபா 2000/=
*கார்/வான் மற்றும் இதர ரூபா 7000/=

பெற்றோல் விநியோகத்தின் போது வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் கீழ்வருமாறு விநியோக ம் மேற்கொள்ளப்படும்.
*செவ்வாய் , சனி – 0,1, 2
*வியாழன்,ஞாயிறு- 3, 4, 5
*திங்கள் புதன் வெள்ளி- 6,7,8,9

இதற்கு மேலதிகமாக QR code முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை யில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.எரிபொருள் விநியோக அட்டையில் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு மேலதிகமாக ஏதேனும் ஒரு எரிபொருள் நிலையத்தில் அவ் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் விநியோகிக்கப்படும்.

யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையம் அத்தியாவசிய தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. காரணமாக பொதுமக்கள் இது தவிர்ந்த ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றறார்கள்.

மேலும் தனியார் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கும் , பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை சாலைகள் ஊடாக தொடர்ந்து வழமைபோன்று டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படும் .
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விநியோக திகதிகள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடப்படும்.

எனவே பொதுமக்கள் வரிசையில் காத்திராது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும்படியும், விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மேலான ஒத்துழைப்பு வழங்கி எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image