Home » தேசிய சபை அமைப்பதற்கான பிரேரணை பாராளளுமன்றத்தில் நிறைவேற்றம்

தேசிய சபை அமைப்பதற்கான பிரேரணை பாராளளுமன்றத்தில் நிறைவேற்றம்

Source
Share Button

தேசிய சபையின் பிரதான நோக்கம் உள்ளடக்கப்படவில்லை என்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய சபையில் இடைகக்hல அரசாங்கத்திற்கான யோசனை முன்;வைக்கப்பட்ட போதும,; இடைக்கால அரசாங்கத்தை காண முடியவில்லை என்று அவர் கூறினார். ஆகையினால் தேசிய சபை யோசனைக்கு ஒத்துழைப்ப வழங்குவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம், அரசியல் மூலோபாயமாக தேசிய சபையினை பயன்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கட்சிகளின் அபிப்பிராயங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு தேசிய சபையின் ஊடாக வேலைத்திட்டம் அவசியம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸவித்தாரன கூறினார். அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளை திருத்தியமைப்பதற்கு தேசிய சபையை பயன்படுத்த முடியுமாயின,; அதற்கு ஒத்துழைப்ப வழங்குவதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதை மக்கள் எதிர்பார்ப்பதாக ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கூறினார்.

தேசிய சபையின் ஊடாக அதனை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி வேலைத்திட்டத்தினை செயற்படுத்தக்கூடிய இடமாக தேசிய சபையினை முன்னெடுக்க வேண்டும்; என்ற பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சபை பற்றி பிரச்சினைகள் இருந்த போதும் அதை நிராகரிப்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறினார். நாட்டின் தற்போதைய நெருக்கடியினை தீர்ப்பதற்கு நடுதத்ர மற்றும் நீண்ட கால தீர்வு அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்காக தேசிய சபைக்கு மகத்தான இடம் கிடைக்கும் என்றும் அவர் கறிப்பிட்டார்.

தனிப்பட்ட நலன்களுக்கு புறம்பாக சகலரும் அர்ப்பணிப்படன் செயற்படுவது அவசியம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய சபை வழிகோலும் என்று அமைச்சர் நசீர் அகமட் கூறினார். சகல கட்சிகினதும் இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய பொருளாதார கட்டமைப்பை நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனறு விவாதத்தில் பங்கேற்ற ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கூறினார். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் சகலரும் தேசிய சபைக்கு ஒத்தழைப்ப வழஙக் வேண்டும்; என்றும் அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image