தேசிய பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சபாரி வாகனங்களைத் தவிர வேறு வாகனங்கள் நுழைவதற்குத் தடை

யால, வில்பத்து, ஹோட்டன்தென்ன உள்ளிட்ட தேசிய பூங்காக்களுக்குப் பதிவு செய்யப்பட்ட ஸபாரி வாகனங்கள் தவிர வேறு எந்தவொரு வாகனங்களிலும் உள்நுழைய வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, சிவனொளிபாதமலை வனப்பிரதேசம், சிங்கராஜ உள்ளிட்ட சுற்றாடல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையினை வழங்கியிருக்கின்றார்.
