தேசிய பேரவை தொடர்பான யோசனை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள உத்தேச தேசிய பேரவை என்ற பாராளுமன்ற குழு தொடர்பான யோசனை, எதிர்வரும் 20ஆம் திகதிக்கான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு சபாநாயகர் தலைமை தாங்குகிறார். பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாக்கள் ஆகியோர் தீர்மானிக்கக்கூடியவாறு பாராளுமன்றறத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளைச் சேர்ந்த 35ஐ தாண்டாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் அங்கத்துவம் பெறுவது அவசியமாகும்.
