தம்பானை சமூக வானொலி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கையின் வேடுவர் சமூகத்தின் கலாசாரத்தையும் மொழி அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி தம்பானை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. 13 நிறைவாண்டு நிகழ்வை முன்னிட்டு இன்று சாந்தி பூஜை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வேடுவ சமூகத்தின் தலைவர் உறுவரிகே வன்னியலஅத்தோ நிகழ்விற்குத் தலைமை தாங்குவார்.