தேசிய விவசாயக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன

தேசிய விவசாயக் கொள்கை தயாரிக்கப்படவுள்ளது. இதன் இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்ததிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையிலான புத்திஜீவிகளைக் கொண்ட குழு இந்தப் பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். விவசாய அமைச்சின முன்னாள் செயலாளர்கள், முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல்வேறு பிரதிநிதிகளும் இதில் இடம்பெற்றிருந்ததாக அமைச்சர் கூறினார். இந்தக் குழுவின் இறுதிச் சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
