தேசிய விவசாய கொள்கைத்திட்டம் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய விவசாய கொள்கைத்திட்ட தயாரிப்பின் போது பாராளுமன்றத்திலுள்ள சகல உறுப்பினர்களினதும் கருத்துகளும் பெறப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற செயலமர்வின் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.