தேர்தலுக்கான அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் லிபியாவின் எதிர்வாதத் தரப்புக்கள் மத்தியில் தொடர்ந்தும் இழுபறி

தேர்தலுக்கான அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் லிபியாவின் எதிர்வாதத் தரப்புக்கள் உடன்பாட்டிற்கு வரத் தவறியுள்ளன. இது தொடர்பான மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் எகிப்தில் இடம்பெற்றது. இணக்கப்பாடின்மையால் சுமார் ஒரு தசாப்தகாலமாக இடம்பெறும் அரசியல் சர்ச்சைக்குத் தீர்வு காணும் சர்வதேச முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை கடந்த 12ம் திகதி ஆரம்பமானது. எனினும் தேர்தலுக்கு வழிவகுக்கும் நிலைமாறு கால ஆட்சி முறை தொடர்பில் இருதரப்பும் இணங்கத் தவறியிருப்பதாக ஐக்கிய நாடுகளின் உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
