பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றிற்கான தேர்தலில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி முகாமைத்துவத்திற்கு இது முக்கியமானதாகும். நாட்டின் நிதித் தேவையை இதன் மூலம் முகாமைத்துவம் செய்ய முடியும். மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது, தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறைமைக்கு மாற்றீடான முறையொன்றை அறிமுகம் செய்வது அவசியமாகும். தேர்தலை நடத்துவதற்கான ஜனநாயக முறைமையை பாதுகாக்க அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.