Home » தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்

Source
Share Button

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பான சட்ட வரைவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.

அதற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அது பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, வங்கிச் சட்டத்திற்கு துணையாக வங்கிச் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே அதன் ஆரம்ப சட்டமூலத்தை தயாரித்துள்ளது.

அந்த சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு வரைவுத் தயாரிப்பாளருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் நிதி நிறுவனங்களின் நெருக்கடி முகாமைத்துவ கட்டமைப்பின் கீழ் வங்கித் தீர்வு கட்டமைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இது ஒரு அவசர மற்றும் முன்னுரிமைப் பணியாக மத்திய வங்கியால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே, 75வது சுதந்திர தினத்தன்று, தேசிய பூங்காக்கள், மக்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை, கட்டணம் இன்றி பார்வையிட முடியும். அதுமாத்திரமன்றி, டிக்கெட் கட்டணத்தை விட 50 சதவீதம் குறைவான தொகையில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் பதில் ஊடகத்துறை அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்தார். அத்துடன் இலங்கை தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொள்கை சுமார் 15 ஆண்டுகள் பழமையானது. தற்காலத்திற்கு ஏற்றவாறு திருத்தம் செய்ய வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.

சுகாதார செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image