தனியார் பஸ் வண்டிகள் இன்று வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளும் இன்று வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இன்று வழமைபோன்று சேவையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை ரெயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு ரெயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆனால், இன்று இடம்பெறவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பதாக ரெயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.