மக்களை பணயக் கைதிகளாகப் பயன்படுத்தி தொழிற்சங்க உரிமைகளைவென்றெடுப்பது தொழிற்சங்களின் பணியல்ல என்று புத்திஜீவிகளும் அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். தமது உரிமைகளை வென்றெடுக்க தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை தொழிற்சங்கங்களுக்குக் காணப்படுகின்றது. ஆனால், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மின்சாரம், எரிபொருள் என்பன தொடர்ச்சியான முறையில் வழங்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொட்களின் விலையும் தற்சமயம் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் மீது சாதகமான நிலைப்பாட்டுடன் செயற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். திட்டமிட்ட அடிப்படையில் முறையான இலக்கை நோக்கி நாடு பயணித்து வரும் வேளையில் அதனை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளபடும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புத்திஜீவிகளும் அரசியல் விமர்சகர்களும் வலியுறுத்தியுள்ளார்கள். இதேவேளை, தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களை பகடைக்காயாக பயன்படுத்தும் தொழிற்சங்கங்களை நாட்டின் வரலாற்றில் அவதானிக்க முடிந்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.