தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடு செல்லும் பெண்களின் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார அசை;சரவைக்கு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. இதற்கமைவாக கடந்த வருடத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கையை செயற்திறன் மிக்கதாகவும், பயனுள்ளதாகவும் நடைமுறை படுத்தும் நோக்கில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, இரண்டு வயதுக்கும் மேற்படாத பிள்ளைகளைக் கொண்டுள்ள தாய்மார் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்;குச் செல்ல அனுமதி கிடைக்காது. இதேபோன்று, 45 வயதுக்கு மேற்படாத பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத பிள்ளைகளை கொண்டுள்ள தாய்மார் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை முழுமை படுத்துவது தொடர்பில் மாற்று வழித்திட்டத்தை தாம் வாழும் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். புதிய சுற்றுநிருபத்திற்கு அமைய, பல பிரிவுகளுக்கு உட்பட்ட தொழிலுக்காக வெளிநாடு செல்லும் மகளிர், தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை அலுவலகத்தில் பதிவுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தொழிலுக்காக தாய்மார் nவிநாடு செல்வதினால் பிள்ளைகளின் சமூக, பொருளாதாரம், கல்வி என்பன சீர்குலைவதை குறைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை றுறுறு.ளுடுடீகுநு.டுமு எனும் இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.