Home » தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு உள்ளாகும் அபாயத்தில்!

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு உள்ளாகும் அபாயத்தில்!

Source

தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காத நிலையில், பல தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் போசாக்கின்மையால் அவதியுறுவதுடன், இந்த நிலைமைகளினால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அகில இலங்கை முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேலும் கூறியதாவது:

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை, சில தோட்டங்களில் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்தை பறிக்கப்படாவிட்டால், நாளாந்தக் கூலி கிடைப்பதில்லை. 1000 ரூபா சம்பளத்தை பெருந்தோட்டங்களில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இன்றைக்கு சில தேயிலை தோட்டங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் தேயிலை கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளது.இந்நிலையில் ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலை கொழுந்தை பறிப்பது எப்படி?

தோட்டங்களுக்கு வியர்வையையும் இரத்தத்தையும் வாரி இறைக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதா?

தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை (டாலர்) கொண்டு வரும் ஒரு கூட்டமே. இலங்கை தேயிலை முழு உலகமும் ஏற்றுக்கொண்ட ஒரு பொருளாகும்.தோட்டத் தொழிலாளர்கள் இதற்கு பிரதான பங்களிப்பை செய்கிறனர்.

இந்த நிலைமைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். எனவே இத்தோட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு ஏற்ற சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இத்தோட்டத்தின் வருங்கால சந்ததியினர் போசாக்கின்மையால் அழிந்து போகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image