தோல்பொருள் சார்ந்த ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கூடுதலான வருமானம்
தோல்பொருள் சார்ந்த ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கடந்த மாத இறுதியில் 16 தசம் மூன்று மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது இரண்டு சதவீத அதிகரிப்பாகும். காலணிகள், பொதிகள், இடுப்புப்பட்டிகள் உட்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியின் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.