நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மற்றும் அவற்றில் சட்டவிரோதமாக கட்டடங்களை அமைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டத்திற்கு எதிர்காலத்தில் ஒரு பகுதி ஒதுக்கப்படும். எனினும், குறிப்பிட்ட ஓரிடத்தை பலவந்தமாக கைப்பற்றும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் வலியுறுத்தினார்.
