நத்தார் தினத்தை முன்னிட்டு லங்கா சதோச நிறுவனம் இன்று முதல் 5 பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானம்

லங்கா சதோச நிறுவனம் இன்று முதல் 5 பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. நத்தார் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒருகிலோ பெரிய வெங்காயம் 158 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ பருப்பின் புதிய விலை 378 ரூபாவாகும். ஒரு கிலோ நெத்தலியின் புதிய விலை ஆயிரத்து 100 ரூபா. 425 கிராம் எடைகொண்ட டின்மீனின் புதிய விலை ஆயிரத்து 482 ரூபாவாகும்.
