நத்தார் பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்டப்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
