நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மேலதிக போக்குவரத்து சேவை

.
நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மேலதிக போக்குவரத்துச் சேவை நேற்று ஆரம்பிக்கப்ட்டதாக போக்குவரத்து அமைச்சுத் தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை பயணிகளின் தேவைக்கு அமைவாக புறக்கோட்டை உட்பட பிரதான பஸ் நிலையங்களில் இருந்து மேலதிக சேவையினை முன்னெடுத்து;ளளது. கொழும்பில் இருந்து வேறு மாகாணங்களுக்கு செல்லும் பிரயாணிகளின் வசதி கருதி புறக்கோட்டை மற்றும் மாக்கும்புர பிரதான பஸ் நிலையங்களில் இருந்து 40ற்கும் மேற்பட்ட மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, ரெயில்வேத் திணைக்களமும் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பதாக ரெயில்வேத் திணைக்களத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மேலதிக ரெயில் வண்டிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
