நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 11 இலட்சம் விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகளை பெறுவதற்கு 334 பிரதேச செயலகப் பிரிவுகளில் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.