Home » நலிந்த பிரிவினருக்கான கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் – ரணிலிடம் நேரடியாக மனோ வலியுறுத்து  

நலிந்த பிரிவினருக்கான கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் – ரணிலிடம் நேரடியாக மனோ வலியுறுத்து  

Source
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 14,000/= இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம்  வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் நிகழும் போது, மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியானது. இது தொடர்பில் அரசையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுகிறேன். ஆனால், இந்த நலன்புரி கொடுப்பனவு இலங்கையின் மிகவும் நாளாந்த பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.  பதுளை, கண்டி, நுவரேலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்ட குடும்பங்களை வழமைபோல் ஒதுக்கி விடுவதை நாம் இம்முறை ஏற்க போவதில்லை. நாளாந்த சம்பளம் ரூ. 1,000/+ ஆகவே மாதம் ரூ.25,000/+ என காகிதத்தில் கணக்கு எழுதி இம்மக்களை தவிர்க்க கூடாது. அதேபோல், பெருந்தோட்ட பிரதேசத்தில் தோட்டங்களில் வேலை செய்யாதோரும் வாழ்கிறார்கள். அவர்களும் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினரே. அவர்களுக்கும் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வேண்டும். மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதபடலாம்.  அப்படியானால்  அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுபனவு கிடைக்க வழி ஏற்படும். இது எனது ஆலோசனை. இக்கருத்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி அவரிடம் நேரடியாக கூறியுள்ளார். இது தொடர்பில் வினவிய போது, மனோ எம்பி கூறியதாவது, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களின் வழிகாட்டலில் இலங்கை அரசு இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவை நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்து இப்போது, உதவி பெறக்கூடிய குடும்பங்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இவற்றை மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் செய்கிறாகள். இதற்கு பொறுப்பாக  நலன்புரி நன்மைகள் சபை  செயற்படுகிறது. சமூக பாதுகாப்பு சட்டமூலம் (Social Security Bill) விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. சமுர்த்தி கொடுப்பனவுகளில் பெருந்தோட்ட மக்களுக்கு நியாமான வாய்ப்பு இல்லை. அதேநிலைமை இதிலும் ஏற்பட்டுவிடக்கூடாது. இன்று இருக்கும் சமுர்த்தி பட்டியலில் உதவி பெற தகுதி அற்றவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அரசியல் காரணமாக அவை நடக்கின்றன. ஆனால், இந்நாட்டில் எல்லா கணிப்பீடுகளிலும் உணவின்மை, வறுமை  ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ள  பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதில்லை. அது இம்முறை நடந்து விடக்கூடாது. மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதபடலாம்.  .  அப்படியானால்  அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வழி ஏற்படும். இது எமது ஆலோசனை. TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image