நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் இன்று தொடக்கம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல், பொதுவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பேணுதல் என்பனவற்றை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
