நாடளாவிய ரீதியில் உள்ள 18 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவை வழங்கும் வேலைத்திட்டம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றினால், பாடசாலை மாணவர்களின் போஷாக்குக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் போஷாக்கை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கென 27 மில்லியன் ரூபா வழங்கப்படவிருக்கிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவை வழங்கத் திட்டமிட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்திற்கென நாளாந்தம் 82 மெற்றிக் தொன் அரிசி தேவையாவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசி தொகையை நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக வழங்க விவசாய அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் பாடசாலை மாணவர்கள் நன்மை அடையவுள்ளார்கள்.
