நாடாளவிய ரீதியில் எரிபொருள் விநியோக நடவடிக்கையினை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை

நாடாளவிய ரீதியில் எரிபொருள் விநியோக நடவடிக்கையினை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை. பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டி மற்றும் வேன் வண்டிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் விநியொகிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடற்றொழில், சுற்றுலா மற்றும் உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை உட்பட விவசாய வேலைத்திட்டங்களுக்கும் பொது போக்குவரத்து சேவைக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இதேவேளை, மோசடியான எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். கியூ.ஆர்.குறியீட்டு முறையினை விரைவுபடுத்துவது பற்றி கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
