இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களிற்கு இன்று முதல் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வீட்டிற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நாளை இடம்மெறவுள்ள நிலையில் இன்று காலை முதல் இந்த இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்வில் எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என த.தே.ம.முன்னணி தெரிவித்துள்ள நிலையுல் இன்று முதல் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தின்போது தமக்கு பாதுகாப்பு வேண்டாம் என முன்னணி அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
TL