Home » நாடு முழுவதிலும் பஸ் சேவை வழமைக்கு

நாடு முழுவதிலும் பஸ் சேவை வழமைக்கு

Source
Share Button

கடந்த சில நாட்களில் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் வண்டிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டபோதிலும் நேற்று சுமார் பத்தாயிரம் பஸ் வண்டிகள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பஸ் வண்டிகளில் 75 சதவீதமாகும். தனியார் பஸ் வண்டிகளுக்கான எரிபொருள் சிக்கல் தற்போது தீர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பஸ் வண்டிகளின் சேவைக்கு எந்தச் சிக்கலும் இல்லையென சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். தனியார் பஸ் வண்டிகளுக்கும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கும் போக்குவரத்துச் சபை எரிபொருளை விநியோகித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image