நாட்டில் அத்திவாசிய மருந்து வகைகளுக்கு இருந்து வந்த தட்டுப்பாடு தற்போது குறைவடைந்திருப்பதாக அமைச்சர் கலாநிதி ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நாட்டிற்குத் தேவையான அத்திவாசிய மருந்து வகைகளில் சுமார் 169 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்பொழுது சிறந்த முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.