நாட்டின் சுகாதார அமைப்பினால் எதிர்வரும் வருடத்திற்குள் தட்டுப்பாடு இன்றி மருந்துகளை வழங்க முடியும் – சுகாதார அமைச்சுத் தெரிவிப்பு

நாட்டின் சுகாதார அமைப்பினால் எதிர்வரும் வருடத்திற்குள் தட்டுப்பாடு இன்றி மருந்துகளை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான குறுகிய கால, மற்றும் நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், பல்வேறு துறைகள் மூலம் எதிர்காலத்தில் தேவையான மருந்துகளுக்கு கட்டளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில், மருந்து தட்டுப்பாடு தொடர்பான பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
