நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் ஆறு சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 59.2 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில் 53.2 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.