இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொண்டு வரும் வேலைத்திட்டத்திற்கு சீனா வழங்கும் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார். மூன்றாவது பதவிக் காலத்திற்காக தெரிவாகி உள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஷி ஜின் பிங் தலைமையில் சீன அடைந்துள்ள முன்னேற்றத்தை இலங்கை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். சீன ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்குள் இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு மேலும் பலமடையும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.