நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை மூலம் வலுவான ஆதரவை வழங்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு புதிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, உரிய தொழில்துறையுடன் தொடர்புடையோருக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு ஜெட்வின் ஹொட்டலின், பீச் ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்ற பொன்விழா கலந்து கொண்ட பிரதமர், சுற்றுலாத்துறையின் மூலம் நாட்டுக்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்று குறிப்பிட்டார். இலங்கையை ஒரு பயண இலக்காக அறிமுகப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பிரதிநிதிகளின் வலையமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலத்திரனியல் கட்டண முறைகள் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நிதித்துறையும், மத்திய வங்கியும் இணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.