நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் பொருந்தும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவித்தல் அமுலிலிருக்கும்.